/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் எழும்பூரில் போராட்டம்
/
கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் எழும்பூரில் போராட்டம்
கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் எழும்பூரில் போராட்டம்
கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் எழும்பூரில் போராட்டம்
ADDED : அக் 07, 2025 12:45 AM

சென்னை,எழும்பூரில், தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நேற்று, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் பொது நலச்சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடந்த போராட்டத்தில், தமிழகம் முழுதும் இருந்து, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது, 'அரசு கேபிள் டிவியின் போர்வையில், தனியார் மந்திரா நிறுவனத்தின் அடாவடி போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் 'செட்டாப் பாக்ஸ்'களை மாற்றச்சொல்லி மந்திரா நிறுவனம் தரும் தொல்லைகளை தடுக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.