/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரின்ஸ் கல்லுாரியில் 'கேக் பேக்கிங்' பயிற்சி
/
பிரின்ஸ் கல்லுாரியில் 'கேக் பேக்கிங்' பயிற்சி
ADDED : ஜூன் 20, 2025 11:56 PM
சென்னை, சென்னை கவுரிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவ - மாணவியர், சுற்றுவட்டார பெண்களுக்கான, 'கேக் பேக்கிங்' குறித்த, ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
உயிர்த்தொழில்நுட்பவியல் துறையுடன் கைகோர்த்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலிங் நிதி உதவியுடன் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி துவக்க விழாவில், பிரின்ஸ் கல்வி குழும தலைவர் டாக்டர் வாசுதேவன், துணை தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், கல்லுாரி முதல்வர் கல்பனா, தமிழக தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறை மாவட்ட திட்ட மேலாளர் சீனுவாசன் ஆகியோர் பேசினர்.
பயிற்சி பட்டறையில், சமையலைக்கூட தொழில்நுட்ப ரீதியாக சிறுதொழிலாக மாற்றலாம் என்பதை, பயிற்சி வாயிலாக மாணவ, மாணவியர் மற்றும் சுற்றுவட்டாரப் பெண்களுக்கு விபரிக்கப்பட்டது.
சுயதொழில் தொடங்கி திறன்களை வளர்த்துக்கொள்ள பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில், 'கேக் பேக்கிங், அலங்காரம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்' உள்ளிட்ட நுட்பங்கள் கற்பிக்கப்பட்டன.
மேலும், பேக்கிங் கருவிகள், கேக் அலங்காரம், ஈ- காமர்ஸ், உணவு பாதுகாப்பு ஆகியவற்றையும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமானோர் கற்றுக்கொண்டனர்.
***