/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு அழைப்பு
/
கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 26, 2024 12:53 AM
சென்னை, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பி.சி., - எம்.பி.சி., பிரிவைச் சேர்ந்த மாணவ- மாணவியருக்கு தலா, 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
மேற்படி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக, புதுப்பித்தலுக்கு டிச., 15ம் தேதியும், புதியதுக்கு 2025 ஜன., 15ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.