/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீனியர் ஹாக்கி அணிக்காக வீரர்கள் தேர்வுக்கு அழைப்பு
/
சீனியர் ஹாக்கி அணிக்காக வீரர்கள் தேர்வுக்கு அழைப்பு
சீனியர் ஹாக்கி அணிக்காக வீரர்கள் தேர்வுக்கு அழைப்பு
சீனியர் ஹாக்கி அணிக்காக வீரர்கள் தேர்வுக்கு அழைப்பு
ADDED : மார் 17, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநில சீனியர் ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக, சென்னை அணிக்கான தேர்வு முகாம், நாளை நடக்கிறது.
சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாநில அளவிலான சீனியர் ஹாக்கி போட்டி, திருச்சியில் நடக்க உள்ளது. இப்போட்டியில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்க உள்ளன.
இப்போட்டியில் பங்கேற்கும் சென்னை அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் முகாம், நாளை காலை 6:00 மணிக்கு, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது.
தேர்வு தொடர்பான விபரங்களுக்கு, 63831 46742, 98402 98199 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.