/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சிலம்பம் மாணவர்களுக்கு அழைப்பு
/
மாநில சிலம்பம் மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 14, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவர், மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விநாயக மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிகர்நிலை பல்கலை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான சிலம்ப போட்டி, வரும் 17ம் தேதி நடக்க உள்ளது.
போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கின்றன. மாநில முழுதும் இருந்து, 5 - 19 வயதுடைய மாணவ - மாணவியர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 72000 60626 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

