/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைய பத்திரம் விண்ணப்பிக்க அழைப்பு வாரிய குடியிருப்பில் அலுவலகங்கள் திறப்பு
/
கிரைய பத்திரம் விண்ணப்பிக்க அழைப்பு வாரிய குடியிருப்பில் அலுவலகங்கள் திறப்பு
கிரைய பத்திரம் விண்ணப்பிக்க அழைப்பு வாரிய குடியிருப்பில் அலுவலகங்கள் திறப்பு
கிரைய பத்திரம் விண்ணப்பிக்க அழைப்பு வாரிய குடியிருப்பில் அலுவலகங்கள் திறப்பு
ADDED : நவ 10, 2024 08:51 PM
செம்மஞ்சேரி:தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில், 28,700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு, கிரைய பத்திரம் வழங்க, நேற்று முன்தினம் முதல், ஐந்து இடங்களில் நிரந்தர அலுவலகங்கள் செயல்படுகின்றன.
செம்மஞ்சேரி பகுதிக்கு எஸ்டேட் அலுவலகம், பெரும்பாக்கம் எழில் நகரில் 'ஏ' பிளாக்; பெரும்பாக்கம் 1வது திட்ட குடியிருப்புக்கு, 9வது பிளாக்; 2வது திட்ட குடியிருப்புக்கு 118வது பிளாக் மற்றும் லைட் ஹவுஸ் திட்ட குடியிருப்புக்கு, 9வது பிளாக் என, ஐந்து இடங்களில் அலுவலகம் திறக்கப்பட்டன.
இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஐந்து அலுவலகங்கள், தினமும் திறந்திருக்கும். நேரடி ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள், அசல் ஒதுக்கீடு ஆணை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, மின்பகிர்மான அட்டை, வாரிசுதாரர்கள் என்றால் அதற்கான சான்று எடுத்து வரவேண்டும்.
வாரியத்தில் தவணை, வாடகை, பராமரிப்பு தொகை செலுத்திய ரசீது, 50 ரூபாய் முத்திரைத்தாள் மற்றும் வீட்டுமுன் எடுக்கப்பட்ட புகைப்படம், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், 2016ம் ஆண்டுக்கு முன், ஒதுக்கீடுதாரர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி இருந்தால், அதற்கான ஆவணம் மற்றும் மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன், 5,000 ரூபாய் அபராதம், நிலுவை பராமரிப்பு தொகை செலுத்தி, பெயர் மாற்றம் செய்து, கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக, அலுவலகத்தில் இருக்கவும், வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முகாம் நடத்தியும், விண்ணப்பம் பெற உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.