ADDED : செப் 28, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், செல்லப்பிராணிகள் வளர்ப்போர், அவர்களது நாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெறிநாய் தடுப்பூசி போடுவது கட்டாயம்.
இது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக வெறிநாய் தினமான இன்று, தாம்பரம் மாநகராட்சியில் முதற்கட்டமாக, 250 நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.
பெருங்களத்துார் மண்டல அலுவலகம் பின்புறத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில், இன்று காலை 8:00 மணி முதல் மதியம் 11:00 மணி வரை, நாய்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.