/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தட்டையான பாதம் குணப்படுத்த முடியுமா?
/
தட்டையான பாதம் குணப்படுத்த முடியுமா?
ADDED : ஏப் 06, 2023 10:57 PM

தட்டையான பாதம் என்பது, மக்கள் தொகையில் 13 சதவீத பேருக்கு, பரவலாக காணப்படும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று.
பலரும் இதை சாதாரணமாக எண்ணுகின்றனர். ஆனால், இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பொதுவாக பாதங்களின் நடுப்பகுதி சற்று உள்நோக்கி வளைந்திருக்கும்.
அப்படி இல்லாமல் சமமாக இருந்தால், அவை தட்டைப் பாதங்கள் என அழைக்கப்படுகின்றன. இது பாதத்தின் இடைநிலையில் உள்ள நீள் வளைவு பகுதியை குறிக்கிறது.
தட்டையான பாதங்கள் சில நேரம் வலியை உண்டாக்குவதோடு, நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தட்டையான பாதத்தில் இரண்டு வகை உண்டு. 'நெகிழ்வான' மற்றும் இறுக்கமான ஒன்று.
குழந்தைகளிடம் காணப்படும் தட்டையான பாதம், எளிதில் மாறக்கூடியவை. இது நெகிழ்வான வகையைச் சார்ந்தது. குழந்தைகள் ஓட, விளையாட மற்றும் நடக்கும் போது, அது வளைந்து உடல் இயக்கத்திற்கு ஏதுவாக செயல்படுகிறது.
அது அப்படி மாறாமல் இருப்பின், அது இயன்முறை சிகிச்சையால் குணப்படுத்தப்படுகிறது.
பெரியவர்களிடத்தில் ஏற்படும் தட்டையான பாத கோளாறு, இறுக்கமான வகையைச் சார்ந்தது. கணுக்காலின் உட்புறத்தில் உள்ள 'மிடியாலிஸ் தசை நார்' என்ற தசை நாரை பலவீனப்படுத்தும்.
இது, பாதம் வளைவதற்கு ஊன்றுகோலாக செயல்படும் முக்கிய தசை.
ஓடும் போதோ அல்லது குதிக்கும் போதோ வலி ஏற்படுவது, தட்டையான பாதத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். அதற்கு தீர்வாக காலின் தசைகளை வலுப்படுத்த, 'மீடியல் ஆர்ச் சப்போர்ட் இன்சோல்ஸ்' மற்றும் இயன்முறை மருத்துவம் திட்டம் வகுத்து தரப்படும்.
ஒருவேளை மேலே குறிப்பிட்டுள்ள சிகிச்சை பலனளிக்காத பட்சத்தில், அறிகுறியுடனான தட்டையான பாதங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்த தட்டையான பாதம் கீழ்காணும் மூட்டு பிரச்னைகளை உருவாக்கி, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும்.
1. சப்டேலார் ஆர்த்ரைடிஸ் -கணுக்கால் கீழ் எலும்பு மூட்டு தேய்மானம்
2. தசை நார்களின் செயல்திறன் மிகவும் பாதிக்கப்படுதல்
3. பாதம் மற்றும் கணுக்கால் நரம்பு வலி
4. பாதத்தின் இயன்முறை பாதிக்கப்பட்டு பாதத்தில் புண் ஏற்படுதல்.