sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணி தரம் கேள்விக்குறியால் மீண்டும் ஆபத்து

/

 கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணி தரம் கேள்விக்குறியால் மீண்டும் ஆபத்து

 கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணி தரம் கேள்விக்குறியால் மீண்டும் ஆபத்து

 கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணி தரம் கேள்விக்குறியால் மீண்டும் ஆபத்து


ADDED : மார் 11, 2026 05:54 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி: வேளச்சேரி ஏரி உபரிநீர் கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமானம் தரமில்லாமல் உள்ளதால், மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பகுதிமக்கள் குற்றம் சாட்டினர்.

வேளச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், 20 அடி அகல கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில், கால்வாய் மூழ்கியதில், மதகு பகுதியை ஒட்டி உள்ள தடுப்பு சுவர் இடிந்து, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பகுதிமக்கள், 10 ஆண்டுகளாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 176வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம், மன் ற கூட்டத்தில் முறையிட்டதையடுத்து, தடுப்பு சுவர் கட்ட மாநகராட்சி முன்வந்தது.

இதையடுத்து, இடிந்த தடுப்பு சுவரையும், எதிரே மண் சுவராக இருந்த பகுதியிலும் கான்கிரீட் கட்டமைப்பில் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.

ஆனால், ஏற்கனவே 4 அடி உயரத்தில் தரைத்தளம் பிடிமானம் இல்லாமல் உள்ள தடுப்பு சுவர் மீது, புதிய தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.

மேலும், இரும்பு ஜாக்கி கொண்டு பிடிமானம் கொடுக்காமல், சவுக்கு கம்பால் பிடிமானம் கொடுத்ததால் தடுப்பு சுவர் சாய்ந்துள்ளது.

கான்கிரீட் தடிமனுக்கு ஏற்ற தரமான உள்கம்பியும் அமைக்கப்படவில்லை. இதனால், பக்கவாட்டில் மண் சரியும்போது, தடுப்பு சுவரும் இடியும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஏரி கொள்ளளவை மீறி உபரிநீர் வெளியேறும்போது, தடுப்பு சுவர் இடிந்து, ஒட்டி உள்ள சசி நகர், பாலாஜி காலனி, அஷ்டலட்சுமி நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என, பகுதிமக்கள் அச்சப்படுகின்றனர்.

மாநகராட்சி உயர் அதிகாரிகள் கள ஆய்வு செய்து, பணியின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us