/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏசி' மின் ரயில் ரத்து பயணியர் 'அப்செட்'
/
'ஏசி' மின் ரயில் ரத்து பயணியர் 'அப்செட்'
ADDED : அக் 12, 2025 01:40 AM
சென்னை:கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படும் 'ஏசி' மின்சார ரயில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், காத்திருந்த பயணியர் ஏமாற்றமடைந்தனர்.
சென்னையில் முதல் முறையாக, 'ஏசி' மின்சார ரயில் சேவை மே மாதத்தில் துவங்கப்பட்டது. இந்த ரயில், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், தினமும் எட்டு சர்வீஸ் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், பயணியர் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது.
இதற்கிடையே, தாம்பரம் - கடற்கரை நேற்று மாலை 5:10, கடற்கரை - செங்கல்பட்டு மாலை 6:17, செங்கல்பட்டு - தாம்பரம் இரவு 8:10 மணி 'ஏசி' ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, நேற்று மாலை 5:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதால், 'ஏசி' ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணியர் ஏமாற்றமடைந்தனர்.