UPDATED : ஆக 29, 2026 06:11 PM
ADDED : ஆக 29, 2026 06:02 PM

அ நிறம் | அளவு
சென்னை:துாய்மை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று, ரிப்பன் மாளிகை வாயிலில் போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 10வது நாளாக, ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு வந்த துாய்மை பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
