ADDED : ஜூன் 22, 2026 01:12 AM
அ நிறம் | அளவு
சென்னை: சைதாப்பேட்டை சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த இப்ராஹிம், 42, 'மாருதி சுஸுகி எர்டிகா' காரில் நந்தனத்தில் இருந்து பாரிமுனை நோக்கி, நேற்று சென்றார்.
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே, இரும்பு மேம்பால கட்டுமானப் பணி பகுதியில், கார் கட்டுப்பாட்டை இழந்து 6 அடி ஆழ பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார், கிரேன் இயந்திரம் உதவியுடன் காரையும், ஓட்டுநரையும் மீட்டனர். விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால், அண்ணா சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
