/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'உச்சா' போனதை கண்டித்ததால் கார், ஆட்டோ கண்ணாடி உடைப்பு
/
'உச்சா' போனதை கண்டித்ததால் கார், ஆட்டோ கண்ணாடி உடைப்பு
'உச்சா' போனதை கண்டித்ததால் கார், ஆட்டோ கண்ணாடி உடைப்பு
'உச்சா' போனதை கண்டித்ததால் கார், ஆட்டோ கண்ணாடி உடைப்பு
ADDED : ஜன 21, 2026 05:49 AM

சென்னை: சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அருகே சிறுநீர் கழித்ததை கண்டித்ததால், கார் மற்றும் ஆட்டோவின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாப்பூர் போலீசார் நேற்று அதிகாலை பி.எஸ்.சிவசாமி சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது போதையில், இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் மரக்கட்டையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார் மற்றும் ஆட்டோவை சேதப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில், தி.நகரைச் சேர்ந்த தாமஸ், 23, என்பதும் மற்ற இருவரும், 16 வயது சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அருகே நின்று சிறுநீர் கழித்ததை, அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரத்தில், நள்ளிரவு வந்து வாகனங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.