/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலத்தில் தீப்பற்றி எரிந்த கார்
/
மேம்பாலத்தில் தீப்பற்றி எரிந்த கார்
ADDED : ஜன 09, 2026 05:47 AM

சென்னை: குரோம்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடபதி, 74. இவர் நேற்று இரவு 8:30 மணிக்கு, 'மாருதி இக்னிஸ்' காரில், மெரினாவிலிருந்து குரோம்பேட்டை நோக்கி, குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.
கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, காரின் முன்பக்கத்திலிருந்து புகை வந்ததால், உடனே ஓட்டுநர் பரமசிவம் காரை நிறுத்தி, வெங்கடபதி உள்ளிட்ட நால்வரை கீ ழே இறக்கினார். சற்று நேரத்தில், கார் தீப்பற்றி எரிய துவங்கியது.
சம்பவம் அறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார், மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தி, மேம்பால அணுகு சாலையில் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
பின், சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை தீயணைப்பு படையினர் தீயை அணைத்தன ர். இதனால், சர்தார் படேல் சாலையில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

