sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்ட்ரலில் ஓடிய கார் தீப்பற்றி எரிந்து நாசம்

/

சென்ட்ரலில் ஓடிய கார் தீப்பற்றி எரிந்து நாசம்

சென்ட்ரலில் ஓடிய கார் தீப்பற்றி எரிந்து நாசம்

சென்ட்ரலில் ஓடிய கார் தீப்பற்றி எரிந்து நாசம்


ADDED : ஜூலை 25, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிம், 32; சென்னையில் 'கால் டாக்சி' ஓட்டி வருகிறார். நேற்று மதியம் 2:40 மணிக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, காரை ஓட்டிச் சென்றார்.

அப்போது, முன்பக்க இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே, சாலையோரம் காரை நிறுத்தி, ஆசிம் கீழே இறங்கினார்.

சிறிது நேரத்திலேயே, கார் கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவம் அறிந்து வந்த வேப்பேரி தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதேபோல், கோடம்பாக்கம் பாரதி ஈஸ்வரன் காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த கபின்ராஜ், 32, தன் 'ஹுண்டாய் ஐ20' காரை, பாரதி ஈஸ்வரன் காலனி, ஒன்றாவது குறுக்கு தெருவில் நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில், காரில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us