ADDED : செப் 25, 2025 02:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், சாலையோர மரம் வேருடன் சாய்ந்ததில், ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி பெறும் மாணவியின் கார் சேதமடைந்தது.
கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கீதா, 24. இவர், அண்ணா நகர், ஆறாவது அவென்யூவில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிற்சி பெறுகிறார்.
நேற்று முன்தினம், தன் 'ரெனால்ட் கிவிட்' காரை, அகாடமியின் எதிரில் நிறுத்தியிருந்தார். அப்போது, சாலையோரம் இருந்த துாங்குமூஞ்சி மரம் வேருடன் பெயர்ந்து விழுந்ததில், காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து, கார் பலத்த சேதமடைந்தது.
அண்ணா நகர் போக்குவரத்து போலீ சார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மரக்கிளை களை வெட்டி அப்புறப் படுத்தினர்.
பருவமழைக்கு முன், சாலையோரத்தில் உள்ள விபத்து அபாய மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.