/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை வாலிபர் ஓட்டிய கார் ஓ.எம்.ஆரில் கவிழ்ந்து விபத்து
/
போதை வாலிபர் ஓட்டிய கார் ஓ.எம்.ஆரில் கவிழ்ந்து விபத்து
போதை வாலிபர் ஓட்டிய கார் ஓ.எம்.ஆரில் கவிழ்ந்து விபத்து
போதை வாலிபர் ஓட்டிய கார் ஓ.எம்.ஆரில் கவிழ்ந்து விபத்து
ADDED : ஜூலை 29, 2025 12:40 AM

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில், போதை வாலிபர் ஓட்டி வந்த கார், சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தேனாம்பேட்டையை சேர்ந்தவர் குபேந்திரன், 38. இவர், நேற்று மாலை, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் இருந்து, சோழிங்கநல்லுார் நோக்கி, அணுகு சாலை வழியாக, 'ரெனால்ட்' என்ற காரை ஓட்டி சென்றார். காரில் வேறு யாரும் இல்லை.
சிறிது துாரம் சென்றதும், கட்டுப்பாட்டை இழந்த கார், அணுகு சாலையில் உள்ள மைய தடுப்பில் ஏறி, தலைகீழாக தார்ச்சாலையில் கவிழ்ந்தது. உடனே, சக வாகன ஓட்டிகள் குபேந்திரனை காரிலிருந்து வெளியே மீட்டனர்.
அவர், நேராக நிற்க முடியாமல், அதீத போதையில் இருந்தார். சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டதால், செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார், காரை ஓரமாக நகர்த்தி வைத்து, போக்குவரத்தை சரி செய்தனர்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், குபேந்திரனை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பின், அவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர்.