தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாணவியை தற்கொலைக்கு துாண்டிய கார் ஓட்டுநர் ‘போக்சோ’வில் கைது

மாணவியை தற்கொலைக்கு துாண்டிய கார் ஓட்டுநர் ‘போக்சோ’வில் கைது

மாணவியை தற்கொலைக்கு துாண்டிய கார் ஓட்டுநர் ‘போக்சோ’வில் கைது


UPDATED : நவ 25, 2026 11:08 PM

ADDED : நவ 25, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 11:08 PM ADDED : நவ 25, 2026 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்களத்துார்: பள்ளி மாணவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், காதலன் சாமுவேல் பின்னி, 22 என்பவர் கைது செய்யப்பட்டார்.

திருப்போரூரைச் சேர்ந்தவர் சாமுவேல் பின்னி, 22; கார் ஓட்டுநர். இவரும், பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

ஒன்றரை மாதங்களுக்கு முன், அந்த மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து வந்தனர்.

இதையறிந்த சாமுவேல் பின்னி தலைமறைவானார். இந்த நிலையில், திருப்போரூர் வந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில், மாணவியை காதலித்து வந்த நிலையில், சாமுவேல் பின்னிக்கு வேறொரு பெண்ணுடனும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார்.

இதையறிந்த மாணவி கண்டித்துள்ளார். இதனால், மாணவியுடனான தொடர்பை, சாமுவேல் பின்னி முற்றிலும் துண்டித்துள்ளார். மனவேதனை அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போக்சோ மற்றும் தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், போலீசார் சாமுவேல் பின்னியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us