/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுாரில் பெண் மீது மோதி மின்கம்பத்தை சாய்த்த கார்
/
வண்டலுாரில் பெண் மீது மோதி மின்கம்பத்தை சாய்த்த கார்
வண்டலுாரில் பெண் மீது மோதி மின்கம்பத்தை சாய்த்த கார்
வண்டலுாரில் பெண் மீது மோதி மின்கம்பத்தை சாய்த்த கார்
ADDED : நவ 17, 2025 03:30 AM

வண்டலுார்: வண்டலுாரில், கடையின் முன் அமர்ந்திருந்த பெண் மீது மோதிய கார், மின் கம்பத்தையும் சாய்த்து விபத்து ஏற்படுத்தியது.
வண்டலுார் அடுத்த காரணை புதுச்சேரி, துளசிராம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ், 55; இவரது மனைவி சங்கரேஸ்வரி, 45. தம்பதி, வண்டலுார், நடேசன் தெருவில், பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு சங்கரேஸ்வரி, கடையின் முன் படிக்கட்டில் அமர்ந்து, பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, நடேசன் தெருவிற்குள் வேகமாக நுழைந்த 'டாடா இண்டிகோ' கார், சங்கரேஸ்வரி மீது மோதி, அருகிலுள்ள மின்கம்பத்தையும் சாய்த்தது.
இதனால், மின் கம்பத்திலிருந்து தீப்பொறி பறந்ததால், அங்கிருந்தோர் பீதியடைந்தனர்.
தகவல் அறிந்த மின்வாரியத்தினர், அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் காயமடைந்த சங்கரேஸ்வரி, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓட்டேரி போலீசார், வண்டலுார், ஸ்டாலின் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாபு, 46, என்பவரை கைது செய்தனர்.

