ADDED : ஜூன் 29, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, கேரளாவைச் சேர்ந்தவர் அப்சல், 25; மடிப்பாக்கத்தில் டிராவல்ஸ் கார் ஓட்டி வருகிறார். நேற்று, செம்மஞ்சேரியில் இரண்டு பயணியரை ஏற்றி, கிண்டி நோக்கி புறப்பட்டார்.
மத்திய கைலாஷ் அருகில், சாலை தடுப்பில் மோதாமல் இருக்க, பிரேக் பிடித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார், தலைகீழாக கவிழ்ந்தது. இதில், அப்சல் மற்றும் பயணியருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் ஞானவடிவேல், 45; கால் டாக்ஸி கார் ஓட்டுநர். நேற்று, திருவான்மியூரில் இருந்து கோட்டூர்புரம் செல்லும்போது, அடையாறு, எல்.பி., சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், கேமரா கம்பத்தில் மோதி சேதமடைந்தது.
ஞானவடிவேலுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்துகளுக்கு ஓட்டுனர்களின் துாக்க கலக்கமே காரணம் என, தெரிந்தது.