தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காரை திருடி மிரட்டியோர் கைது

காரை திருடி மிரட்டியோர் கைது

காரை திருடி மிரட்டியோர் கைது


ADDED : அக் 06, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அயனாவரம்,

அயனாவரம், புதுநகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார், 38. இவரிடம், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 28, என்பவர் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவர் மீது வழக்குகள் உள்ளது தெரிந்து, வேலையை விட்டு நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி உதயகுமார் வீட்டில் இல்லாத நேரம், சூர்யா தன் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் இருந்த காரை எடுத்து சென்றார். 'காரை திருப்பி தர 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்; போலீசுக்கு சென்றால் குடும்பத்தையே கொன்று விடுவேன்' என மிரட்டிஉள்ளார்.

அயனாவரம் போலீசில் 3ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. சூர்யா, 28, மற்றும் அவரது கூட்டாளிகளான ஒரகடம் அன்பரசன், 32, பாடி வினோத்குமார், 27, வெற்றி, 29, புழல் பரத், 29, ஆகிய ஐந்து பேரை நேற்று போலீசார்கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us