ADDED : நவ 07, 2025 02:03 AM

சென்னை: மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான கேரம் போட்டியில், தமிழக ஆடவர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
அகில இந்திய கேரம் சங்கம் மற்றும் மத்திய பிரதேச கேரம் சங்கம் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான இரு பாலருக்குமான, 50வது கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் நடந்தது. இதில், தமிழகம் உட்பட, 20 மாநில அணிகள் பங்கேற்றன.
லீக் கம் நாக் -அவுட் முறையில், ஒற்றையர் மற்றும் குழு பிரிவுகளில் நடந்த போட்டிகளில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், தமிழகத்தின் பவன்குமார் சாம்பியன் பட்டத்தையும், நவீத் அகமது இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தின் டெனினா இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார். தொடர்ந்து நடந்த ஆடவர் குழு போட்டியில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. மேலும், மகளிர் குழு பிரிவு போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

