/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளைச்சல் அமோகம் கேரட் விலை சரிவு
/
விளைச்சல் அமோகம் கேரட் விலை சரிவு
ADDED : மார் 24, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு:கோயம்பேடு சந்தைக்கு ஊட்டியில் இருந்து கேரட் வரத்து உள்ளது. அதேபோல, கர்நாடகாவில் இருந்தும் கேரட் வரத்துள்ளது.
தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், தினமும் 700 - 800 டன் வரும் இடத்தில், தற்போது 1,200 டன் கேரட் வரத்து உள்ளது.
இதையடுத்து, ஊட்டி கேரட் ஒரு கிலோ 25 - 30 ரூபாய்க்கும், கர்நாடகா கேரட் 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்னும் 20 நாட்களுக்கு நீடிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.