/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காட்டுப்பாக்கத்தில் நவீன வீடுகள் காசா கிராண்ட் அமைக்கிறது
/
காட்டுப்பாக்கத்தில் நவீன வீடுகள் காசா கிராண்ட் அமைக்கிறது
காட்டுப்பாக்கத்தில் நவீன வீடுகள் காசா கிராண்ட் அமைக்கிறது
காட்டுப்பாக்கத்தில் நவீன வீடுகள் காசா கிராண்ட் அமைக்கிறது
ADDED : பிப் 22, 2024 12:34 AM
சென்னை,சென்னையில் வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக மாறியுள்ள காட்டுப்பாக்கத்தில், 'காசா கிராண்ட் லினோர்' என்ற, நவீன அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, காசா கிராண்ட் அறிமுகப்படுத்தி உள்ளது.
காசா கிராண்ட் நிறுவன மூத்த துணைத் தலைவர் விமேஷ் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகள், 4.87 ஏக்கர் பரப்பளவில் அமைகின்றன. 1.5 ஏக்கர் திறந்த வெளியுடன், 56,000 சதுர அடி பசுமை புல்வெளி அமைக்கப்படுகிறது.
100 சதவீத வாஸ்து முறையில் கட்டப்படும் குடியிருப்பு வளாகத்தில், உலகத்தரத்தில், 70க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு வசதிகள், நவீன ஆடம்பரமான குடியிருப்புகள் அமைகின்றன.
தவிர, 9,400 சதுர அடியில் நீச்சல் குளம், குழந்தைகளுக்கான நீச்சல் குளம், 11,000 சதுர அடியில் செல்லப்பிராணிகளுக்கான பூங்காவுடன் கட்டப்படுகின்றன.
இத்தாலிய மார்பிள் தரையுடன், நவீன தொழில்நுட்பத்தால் ஆன பூட்டுகள், உயர்நிலை சுகாதார வசதிகளுடன் குடியிருப்புகள் அமைகின்றன.
இந்த குடியிருப்புகள், வீடு வாங்குவோரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும். முதலீட்டாளர்களுக்கு பெரிய வாய்ப்பாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.