/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து இன்ஸ்.,சிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் மீது வழக்கு
/
போக்குவரத்து இன்ஸ்.,சிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் மீது வழக்கு
போக்குவரத்து இன்ஸ்.,சிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் மீது வழக்கு
போக்குவரத்து இன்ஸ்.,சிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 29, 2024 12:28 AM
தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலையோர ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீசார் தொடர்ச்சியாக அகற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம், கடப்பேரி பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றினர்.
அங்குள்ள 'டாஸ்மாக்' கடையின் வெளியே போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் 'நம்பர் பிளேட்'டில் கார்த்திக் என பெயர் எழுதப்பட்டிருந்தது.
மேலும், அதன் சைலன்சர், அதிக சத்தம் எழுப்பக்கூடியதாக இருந்துள்ளது. இதையடுத்து, தாம்பரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், அந்த வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய முயன்றார்.
அப்போது, 'டாஸ்மாக்' கடையில் இருந்து வெளியே வந்த மூன்று பேர், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியனிடம் தகராறு செய்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இது குறித்து, தாம்பரம் சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மூன்று பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், கிழக்கு தாம்பரம், காந்தி நகரைச் சேர்ந்த ஆகாஷ், 25, மேற்கு தாம்பரம், காந்தி நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 26, என்பதும், தப்பி ஓடியவர் அருண் கார்த்திக் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.