/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமி மீது தாக்குதல் செவிலியர் மீது வழக்கு
/
சிறுமி மீது தாக்குதல் செவிலியர் மீது வழக்கு
ADDED : ஜன 20, 2024 12:52 AM
பெரம்பூர், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், குடும்ப வறுமை காரணமாக, தன் 14 வயது இளைய மகளை, தெரிந்த செவிலியர் மூலம், குழந்தைகளை பராமரித்து பார்த்துக் கொள்ள, குமரன் நகரைச் சேர்ந்த ஜோசப் ஜீவன்ராஜ், 38, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு ஊதியமாக, மாதம் 6,000 ரூபாய் பேசியுள்ளனர்.
ஜோசப் தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றில் ஆண் செவிலியராக உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தன் தாயிடம் மொபைல்போனில் பேசிய சிறுமி, வேலை சரியாக செய்யவில்லை எனக்கூறி பெல்ட் மற்றும் பைப்பால் ஜோசப் ஜீவன்ராஜ் அடிக்கிறார்' எனக்கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து ஜோசப்பிடம் சென்று, மகளை தன்னுடன் அனுப்பும்படி கேட்டுள்ளார்.
அவர் மறுத்ததால், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கண்ணகி, சிறுமியிடமும், ஜோசப்பிடமும் விசாரணை நடத்தினார்.
இதனிடையே சிறுமியின் தாய் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், சிறுமியை ஜோசப்பின் வீட்டிலிருந்து மீட்ட போலீசார், அவரை முத்தியால்பேட்டையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின், சிறுமி தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி ஜோசப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.