/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடையில் நபரை இறக்கியோர் மீது வழக்கு
/
பாதாள சாக்கடையில் நபரை இறக்கியோர் மீது வழக்கு
ADDED : செப் 21, 2024 12:23 AM
கோயம்பேடு,
கோயம்பேடு உணவு தானிய கிடங்கில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர், அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், மனித கழிவுகள் நிறைந்திருந்த தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கோயம்பேடு எம்.எம்.சி.ஏ., முதன்மை அதிகாரி இந்துமதி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மனித கழிவு தொட்டியில் நபரை இறக்கி சுத்தம் செய்ய வைத்த தனியார் ஒப்பந்த நிறுவன கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவர் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.