/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : டிச 27, 2024 08:49 PM
சென்னை:பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறியதாகக் கூறி, தி.மு.க., அரசை கண்டித்து, அண்ணா பல்கலை நுழைவாயில் அருகே நேற்று முன் தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடைசெய்யப்பட்ட பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 550 பேரை, போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் 550 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ், நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

