/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையம் முன் பட்டாசு வெடித்த வக்கீல் மீது வழக்கு
/
காவல் நிலையம் முன் பட்டாசு வெடித்த வக்கீல் மீது வழக்கு
காவல் நிலையம் முன் பட்டாசு வெடித்த வக்கீல் மீது வழக்கு
காவல் நிலையம் முன் பட்டாசு வெடித்த வக்கீல் மீது வழக்கு
ADDED : நவ 17, 2024 10:29 PM
ஓட்டேரி:சிறையிலிருந்து வெளியே வந்ததை கொண்டாடும் விதமாக, ஓட்டேரி காவல் நிலையம் முன், பட்டாசு வெடித்த வழக்கறிஞர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாதவரம், பச்சை நாயக்கன் தோட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 34. வழக்கறிஞரான இவர், ஒரு குற்ற சம்பவத்தில் கைதாகி, கடந்த 8ம் தேதி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
கடந்த 14ம் தேதி நள்ளிரவு இவர், மது போதையில் நண்பர்களுடன் இரு கார்களில், ஓட்டேரி காவல் நிலையம் வந்துள்ளார். பின், தான் வெளியே வந்ததை கொண்டாடும் விதமாக, காவல் நிலையம் முன், பட்டாசு வெடித்து, அதை வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.