/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் சான்று திருடு போனதாக நாடகமாடியவர் மீது வழக்கு
/
பைக் சான்று திருடு போனதாக நாடகமாடியவர் மீது வழக்கு
பைக் சான்று திருடு போனதாக நாடகமாடியவர் மீது வழக்கு
பைக் சான்று திருடு போனதாக நாடகமாடியவர் மீது வழக்கு
ADDED : செப் 01, 2025 12:53 AM
திரு.வி.க நகர்:பெரம்பூர், டீட்ஸ் கார்டன் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 31. இவரது, 'ஹார்லி டேவிட்சன்' பைக்கின் பதிவு சான்றிதழ், 2022 அக்டோபர் மாதம் காணாமல் போனதாக கூறி, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பதிவு சான்றிதழின் நகலை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், தன் பைக் ரமேஷ் சந்த் என்பவரின் பெயரில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன அசல் பதிவு சான்றிதழை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டதாகவும், திரு.வி.க., நகர் போலீசில், 2022ம் ஆண்டு, மோகன்ராஜ் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, திருமங்கலம், சம்பந்தர் தெருவைச் சேர்ந்த ரமேஷ் சந்த், என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், மோகன்ராஜ் தன் பைக்கை ரமேஷ் சந்திடம் அடமானம் வைத்து, பணம் வாங்கியது தெரியவந்தது.
பணத்தை திருப்பி கொடுக்க மனம் இல்லாததால், ரமேஷ் சந்த் மீது பொய் வழக்கை மோகன்ராஜ் பதிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின், தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.