/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு

ADDED : அக் 20, 2025 04:34 AM

சென்னை: அண்ணா சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றக்கோரிய போக்குவரத்து போலீஸ்காரரை, தாக்கிய காங்., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, அண்ணா சாலை ஐ.ஓ.பி., வங்கி எதிரே உள்ள 'ஹீரோ' ஷோரூம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக 'டொயோட்டா பார்ச்சூனர்' என்ற சொகுசு கார் நேற்று முன்தினம் மதியம் நிறுத்தப்பட்டிருந்தது.
காரை அங்கிருந்து அகற்றுமாறு, அண்ணா சாலை போக்குவரத்து காவல் நிலைய போலீஸ்காரர் பிரபாகரன், 35, என்பவர் கூறியுள்ளார். அப்போது, காரில் இருந்த மயிலாடுதுறை காங்., - எம்.எல்.ஏ., ராஜகுமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போலீஸ்காரர் பிரபாகரனை தாக்கினார்.
இது குறித்து, விசாரித்த அண்ணா சாலை போலீசார், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், எம்.எல்.ஏ., ராஜகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.