/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதை மின்வடம் சீரமைப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் பலி இருவர் மீது வழக்கு பதிவு

ADDED : ஆக 18, 2025 03:00 AM

கோயம்பேடு:கோயம்பேடில் மழைநீர் வடிகால்வாய் பணியின்போது சேதமடைந்த புதை மின் வடத்தை, சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக, அந்நிறுவன உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை - இ சாலையில் இருந்து, ஆம்னி பேருந்து நிலையத்திற்கு உள்ளே மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது.
ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள போலீஸ் பூத் அருகே, மழைநீர் வடி கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது, புதை மின் வடம் சேதமடைந்து, அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் பாய்ந்துள்ளது.
குப்பை தொட்டியில் 'ஷாக்' அடிப்பதாக துாய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆம்னி பேருந்து நிலையத்தில் மின் பழுது நீக்கும் பணியை மேற்கொள்ளும், 'எஸ்.ஆர்.எம்., என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியரான, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைய பெருமாள், 32, என்பவர், நேற்று முன்தினம் மாலை மின் வடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் இளைய பெருமாள் உயிரிழந்தது தெரியவந்தது. கோயம்பேடு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், எஸ்.ஆர்.எம்., என்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் மகேந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் ஜான் மார்க் ஆகியோர் மீது, கவனக்குறைவாக செயல்படுவதன் மூலம் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.