/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்கள் 585 பேர் மீது வழக்கு பதிவு
/
துாய்மை பணியாளர்கள் 585 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : டிச 14, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில், வெவ்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 585 துாய்மை பணியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.
இதை எதிர்த்தும், பணி நிரந்தம் கோரியும், நேற்று முன்தினம், மெரினா காமராஜர் சாலை கருணாநிதி நினைவிடம் அருகேயும், தலைமைச் செயலகம் அருகேயும், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 585 பேரை போலீசார் கைது செய்து இரவு விடுவித்தனர்.
இவர்கள் மீது அண்ணாசதுக்கம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

