/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜம்மு - காஷ்மீரில் இருந்து பூனை, கரடி விரைவில் வண்டலுாருக்கு வருகிறது
/
ஜம்மு - காஷ்மீரில் இருந்து பூனை, கரடி விரைவில் வண்டலுாருக்கு வருகிறது
ஜம்மு - காஷ்மீரில் இருந்து பூனை, கரடி விரைவில் வண்டலுாருக்கு வருகிறது
ஜம்மு - காஷ்மீரில் இருந்து பூனை, கரடி விரைவில் வண்டலுாருக்கு வருகிறது
ADDED : அக் 08, 2025 03:00 AM
தாம்பரம்,வி லங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலுாருக்கு ஜம்மு - காஷ்மீரில் இருந்து, பூனை, கரடி கொண்டுவரப்பட உள்ளன.
வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், நாட்டின் பல்வேறு பூங்காக்களில் இருந்து, தேவையான விலங்குகள் கொண்டுவரப்படுகின்றன.
இந்த நிலையில், குஜராத், சக்கார்பாக் விலங்கியல் பூங்காவில் இருந்து, ஒரு ஆண், இரு பெண் சிங்கங்கள், ஒரு பெண் காட்டுக்கழுதை கொண்டுவர, கோப்பு தயார் செய்து, மத்திய உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.
பல மாதங்களாக கிடப்பில் போட்டப்பட்ட இந்த விலங்கு பரிமாற்றத்திற்கு, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு பதில், இங்கிருந்து ஒரு காட்டு மாடு, ஒரு ஜோடி வெள்ளை புலி, சறுகு மான், வெள்ளை மயில், மஞ்சள் அனகோண்டா ஆகியவை, குஜராத்திற்கு அனுப்பப்பட உள்ளன. அதேநேரத்தில், சிங்கம் என்பதால், அம்மாநில முதல்வரின் ஒப்புதல் பெற கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அம்மாநில முதல்வரின் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஜம்மு - கா ஷ்மீரில் இருந்து, ஒரு ஜோடி பூனை, கரடி மற்றும் ஹிமாலயன் கரடியும் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்கு, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பதில், வண்டலுாரில் இருந்து, நீர்யானை வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதால், விரைவில், வண்டலுார் பூங்காவில் புதிய வரவுகளை எதிர்பார்க்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.