/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சினை மாட்டின் காலை உடைத்த மாடுபிடி ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
/
சினை மாட்டின் காலை உடைத்த மாடுபிடி ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
சினை மாட்டின் காலை உடைத்த மாடுபிடி ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
சினை மாட்டின் காலை உடைத்த மாடுபிடி ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 12, 2025 12:19 AM
சென்னை, சினை மாட்டின் காலை உடைத்த, மாநகராட்சி மாடு பிடி ஊழியர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர், தன் சினை மாட்டை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, மாநகராட்சி மாடுபிடி ஊழியர்கள், விதிகளை மீறி சாலையில் உலவ விட்டதாக கூறி, சினைமாட்டை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, மாட்டின்இரு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், சாலையிலேயே விட்டுச்சென்றனர்.
இதுகுறித்து, மாட்டின் உரிமையாளர், அபிராமபுரம் காவல் நிலையம் சென்றபோது, 'மாநகராட்சி மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்' எனக்கூறி, புகாரை வாங்க போலீசார் மறுத்தனர். இதுகுறித்து, இம்மாதம் 4ம் தேதி, 'நம் நாளிதழில்' புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில், மாட்டின்கால்களில் எலும்பு முறிவு ஏற்பட காரணமாக இருந்த, இரண்டு மாடுபிடி ஊழியர்களை ஒரு மாதத்திற்கு, 'சஸ்பெண்ட்' செய்து, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, மாடு உரிமையாளர் ஹரிஹரன் கூறுகையில், ''மாடு பிடி வீரர்கள் ஆறு பேரில், இருவரை மாநகராட்சி, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. அவர்கள், 'ஒரு மாதம் கழித்து மீண்டும் நான்தான் உங்கள் பகுதிக்கு வருவேன்; பார்த்துக் கொள்கிறேன்' என, மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதற்கு, நிரந்தர தீர்வு வேண்டும்,'' என்றார்.
காவல் நிலையம் முன் போராட்டம்
தவறை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம், மாடுபிடி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர் புகாரை ஏற்று, மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், போலீசார் தன் கடமையை செய்ய மறுக்கின்றனர். போலீசார் புகாரை பெறாவிட்டால், காவல் நிலையம் முன் போராட்டம் நடத்துவோம். காலை உடைந்த சினை மாட்டின் விலை, 1.50 லட்சம் ரூபாய். மாடுக்கு உரிய இழப்பீடை அரசு தர வேண்டும்.
- தங்க.சாந்தகுமார், தலைவர், நவீன கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம்

