/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து டி.ஏ.வி., பள்ளி அணி அபாரம்
/
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து டி.ஏ.வி., பள்ளி அணி அபாரம்
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து டி.ஏ.வி., பள்ளி அணி அபாரம்
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து டி.ஏ.வி., பள்ளி அணி அபாரம்
ADDED : ஆக 06, 2025 12:27 AM

சென்னைசி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், கே.கே., நகர் பி.எஸ்.பி.பி., மற்றும் டி.ஏ.வி., அணிகள் வெற்றி பெற்றன.
ஆர்.எம்.கே., பாடசாலை பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
மாநிலம் முழுதும் இருந்து, 200 பள்ளிகளில் 5,000 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நேற்று காலை நடந்த 17 வயது மாணவியருக்கான போட்டியில், கே.கே., நகர் பி.எஸ்.பி.பி., பள்ளி மற்றும் கிங்ஸ் பள்ளி அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 52 - 34 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.பி.பி., அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், கோவை சி.எஸ்., அகாடமி அணி, 36 - 15 என்ற புள்ளிக்கணக்கில், பொன்னேரி வேலம்மாள் பள்ளியை வீழ்த்தியது.
அதேபோல், 19 வயது பிரிவில், டி.ஏ.டி., பள்ளி, 44 - 15 என்ற புள்ளிக்கணக்கில் சச்சிதானந்தா பள்ளி அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.