/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி வேலம்மாள் அணிகள் 'சாம்பியன்'
/
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி வேலம்மாள் அணிகள் 'சாம்பியன்'
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி வேலம்மாள் அணிகள் 'சாம்பியன்'
சி.பி.எஸ்.இ., கூடைப்பந்து போட்டி வேலம்மாள் அணிகள் 'சாம்பியன்'
ADDED : ஆக 09, 2025 12:31 AM

சென்னை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில், பல்வேறு வயது பிரிவில், பருத்திப்பட்டு, பொன்னேரி, ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி அணிகள் முதலிடங்களை பிடித்தன.
ஆர்.எம்.கே., பாடசாலை பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், 14 வயது மாணவியர் இறுதிப் போட்டியில், பருத்திப்பட்டு வேலம்மாள் அணி, 50 - 27 என்ற கணக்கில், செங்கல்பட்டு விகாஸ் பள்ளியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. மாணவரில், பொன்னேரி வேலம்மாள் அணி, 46 - 21 என்ற கணக்கில், துாத்துக்குடி விகாஸ் பள்ளியை வீழ்த்தியது.
மாணவியருக்கான, 17 வயது பிரிவில், கோவை சுகுணா பள்ளி முதலிடத்தையும், கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன. மாணவரில், பொன்னேரி வேலம்மாள் முதலிடத்தையும், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலா இரண்டாமிடத்தையும் கைப்பற்றின.
அதேபோல், 19 வயது மாணவியரில் முகப்பேர் டி.ஏ.வி., பள்ளி முதலிடத்தையும், ஹார்ட்புல்னஸ் பள்ளி இரண்டாமிடத்தையும் வென்றன. மாணவரில், ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி முதலிடத்தையும், சேலம் எமரால்டு வேலி பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா, ரக்பி இந்தியாவின் செயலர் செந்தில் தியாகராஜன உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்வில், ஆர்.எம்.கே., குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் உள்ளிட்டோர் இருந்தனர்.