/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் எக்சைஸ் சென்னை சிட்டி போலீஸ் அணி கால்பந்து போட்டியில் 'டிரா'

ADDED : ஏப் 10, 2025 11:39 PM
சென்னை சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்ட்ரல் எக்சைஸ், சென்னை சிட்டி போலீஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தின் 17வது நிமிடத்தில், சிட்டி போலீஸ் அணியின் ராகுல், முதல் கோல் அடித்தார்.
இரு அணியின் தடுப்பும் வலுவாக இருந்ததால், அணிகளுக்கு இடையே போட்டி, அனல் பறக்க துவங்கியது.
போட்டியின் 58வது நிமிடத்தில், சிட்டி போலீஸ் அணியின் தடுப்பை மீறி, சென்ட்ரல் எக்சைஸ் அணியின் வீரர் விக்னேஷ், தன் அணிக்காக ஒரு கோலை பதிவு செய்தார். ஆட்ட முடிவில் 1 - 1 என்ற கோல் கணக்கில், போட்டி டிராவில் முடிந்தது.