/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரங்கோலி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
/
ரங்கோலி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
ADDED : செப் 23, 2024 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சம்ஸ்கார் பாரதி மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இணைந்து, தேசிய அளவிலான மூன்று நாள் ரங்கோலி பயிற்சி பட்டறை, ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்தது.
பாரம்பரிய கலைகளான நடனம், இசை, நாடகம், சங்கீதம், ரங்கோலி, புவி அலங்காரம் உள்ளிட்ட கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இதில், 200 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இறுதி நாளான நேற்று, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அகில பாரதிய புவி அலங்கார நிபுணர் ரகுராஜ் தேஷ்பாண்டே, சம்ஸ்கார் பாரதியின் தமிழக தலைவர் தாக் ஷாயணி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.