தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/செயின் பறித்தவர் கைது

செயின் பறித்தவர் கைது

செயின் பறித்தவர் கைது


ADDED : மார் 19, 2024 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி, வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனியம்மாள், 40. இவர், வியாசர்பாடி, சி - கல்யாணபுரத்தில் உள்ள 'அம்மா' உணவக ஊழியர்.

வழக்கம்போல, நேற்று காலை சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த, 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், பழனியம்மாளை மிரட்டி, இரண்டரை சவரன் செயினை பறித்து தப்பினார்.

வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த அஜய், 21, என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, ஒன்பது வழக்குகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us