ADDED : அக் 08, 2024 12:26 AM
அ நிறம் | அளவு
கே.கே., நகர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வர்மா, 27, என்பவர், கே.கே.நகர் பொன்னம்பலம் சாலையில் கட்டப்படும் கட்டடத்தில் தங்கி, சித்தாள் வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு மது அருந்தி விட்டு, கே.கே.நகர் லட்சுமணசாமி சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது, அங்கிருந்த 5 பேர் இவரை தாக்கி மொபைல் போன், 1 சவரன் செயின் மற்றும் 3,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
