/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி நகராட்சியில் தலைவர் - கமிஷனர் தகராறு
/
பூந்தமல்லி நகராட்சியில் தலைவர் - கமிஷனர் தகராறு
ADDED : பிப் 01, 2024 12:38 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சியில், புத்தாண்டின் முதல் நகர்மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் லதா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, முற்பகல் 11:00 மணியளவில், மக்கள் பிரச்னை மற்றும் நகராட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கு, நகராட்சி தலைவர் காஞ்சனா அனுமதி அளித்தார்.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், 'நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களின் கணவர்கள் அனுமதிக்கப்பட்டதால், அதிகாரிகள் வெளியே சென்று விடுவோம்' எனக் கூறினர்.
இதனால், நகராட்சி கமிஷனர் லதா மற்றும் காஞ்சனா சுதாகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'உறுப்பினர்களின் கணவர்களை அனுமதிக்கக் கூடாது' என, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டது.
அவர்கள் வெளியேற்றப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் உறுப்பினர்கள் உட்பட அனைவரும், கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தி மீண்டும் கூட்டத்தை நடத்தினார்.