ADDED : மே 14, 2026 05:09 AM
சென்னை: பயணியர் வசதிக்காக, சென்னையில் இரண்டாம் கட்டமாக இயக்க உள்ள புதிய மின்சார பேருந்துகளில், சென்னை மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி., சில மாற்றங்களை கொண்டு வருகிறது.
எம்.டி.சி., சார்பில் தற்போது, 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும், 3,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தின மும், 34 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையின் எல்லை நாளுக்குள் நாள் விரிவடைந்து வருகிறது. தற்போது, தாம்பரம், ஆவடி நகராட்சிகள், மாநகராட்சி களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு, திருவள் ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும் புதுார் என, மாநகர போக்கு வரத்து கழக எல்லை மேலும் அதிகரித்துள்ளது.
பயணியர் தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகளை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக தற்போது, 624 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், பயணியர் வசதிக்காக, மின்சார பேருந்துகளில் சில மாற்றங்களை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மின்சார பேருந்துகள் சேவை குறித்து, பயணியரிடம் கருத்து கேட்கப்பட்டது. தாழ்தள வசதி இருப்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்க வசதி யாக உள்ளதாக கூறினர். ஒரு சில மாற்றங்கள் செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, பேருந்தின் பின்பகுதியில் உயரம் குறைவாக இருப்பதால், நிற்க கஷ்டமாக இருக்கிறது. காற்றோட்ட வசதியை அதிக ரிக்க, ஜன்னல்கள் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதுதவிர, தொழில்நுட்ப ரீதியாக, நிர்வாகம் சார்பில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளோம்.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, 500 'ஏசி' பேருந்துகளையும், 250 'ஏசி' இல்லாத மின்சார பேருந்துகளையும் இயக்க உள்ளோம். இதற்கான பணிகளை இரண்டு தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
தயாரான முதல் பேருந்தில் உள்ள புதிய வசதிகள் குறித்து ஆய்வு செய்தோம். வரும் ஆகஸ்ட் முதல் மின்சார பேருந்துகள் வர தொடங்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், 750 மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
