ADDED : மார் 14, 2026 05:04 AM
சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களும், எழும்பூருக்கு வருகை தரும் ரயில்களின் அட்டவணையிலும், மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பொதிகை, நெல்லை மற்றும் சோழன் விரைவு ரயில்களின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்:
சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பொதிகை அதிவிரைவு ரயில், வரும் 17ம் தேதி முதல் ஏப்., 6 வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8:02 மணிக்கு புறப்படும்.
திருநெல்வேலி - எழும்பூர் இடையே இயக்கப்படும், நெல்லை அதிவிரைவு ரயில், வரும் 16ம் தேதி முதல் ஏப்., 5 வரை, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
எழும்பூர் - திருச்சி இடையே, காலை 8:00 மணிக்கு இயக்கப்படும் சோழன் அதிவரைவு ரயில், வரும் 16ம் தேதி முதல் ஏப்., 5 வரை, இரண்டு மணி 15 நிமிடம் தாமதமாக, காலை 10:15 மணிக்கு புறப்படும்.
