ADDED : பிப் 18, 2024 12:01 AM
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை -- தாம்பரத்துக்கு வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 8:15, 9:30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன
சென்னை கடற்கரை -- தாம்பரத்துக்கு இன்று இரவு 8:20, 9:30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஒரு பகுதி ரத்து
தாம்பரம் -- சென்னை கடற்கரைக்கு, வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 11:20, 11:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்
செங்கல்பட்டு -- சென்னை கடற்கரைக்கு, வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 11:00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்
கடற்கரை -- தாம்பரத்திற்கு இன்று இரவு 11:15, 11:35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்
செங்கல்பட்டு -- சென்னை கடற்கரைக்கு இன்று இரவு 11:00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.