/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரை - செங்கை தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்
/
கடற்கரை - செங்கை தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்
ADDED : பிப் 21, 2024 02:33 AM
சென்னை:சிங்கப்பெருமாள்கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, இன்று மதியம் 1:15 மணி முதல் 2:15 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், இந்த தடத்தில், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, காலை 11:40, மதியம் 12:20 மணி ரயில்கள், சிங்கபெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும்
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1:00, 1:45 மணி ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் இருந்து இயக்கப்படும்
இதேபோல், கொருக்குப்பேட்டை - பேசின்பாலம் இடையே வரும் 21, 22, 23, 26, மார்ச் 2ம் தேதிகளில், இரவு 11:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சூலுார்பேட்டை - சென்ட்ரல், இரவு 9:40 மணி ரயில், சென்னை கடற்கரைக்கு செல்கிறது. இதனால், பேசின்பிரிட்ஜ், சென்ட்ரலுக்கு செல்லாது
சென்ட்ரல் - ஆவடி இரவு 11:45 மணி ரயில் வரும் 21, 22, 23, 26, 27, 28, 29, மார்ச் 1, 2ம் தேதிகளில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு செல்லும்.
இத்தகவலை, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

