ADDED : மார் 20, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,  சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் பொன்னேரி - மீஞ்சூர் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 சென்னை சென்ட்ரல் --- கும்மிடிப்பூண்டிக்கு, வரும் 21, 23, 24ம் தேதிகளில் காலை 9:00, 10:35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்
 கும்மிடிப்பூண்டி -- சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 20, 21, 23ம் தேதிகளில் காலை 9:55 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும்
 சூலுார்பேட்டை - --சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 21, 23, 24ம் தேதிகளில் காலை 10:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும்.

