/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தேர் அமைக்கும் பணி துவக்கம்
/
திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தேர் அமைக்கும் பணி துவக்கம்
திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தேர் அமைக்கும் பணி துவக்கம்
திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தேர் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மே 10, 2025 12:23 AM

பூந்தமல்லி, பூந்தமல்லியில், வைணவ மகான் திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு, 27 அடி உயரம், 10 அடி அகலத்தில், 69 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் அமைக்க, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து, புதிய தேர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக, பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.
ஹிந்து சமய அறநிலையத்துறைyin வேலுார் மண்டல இணை ஆணையர் அனிதா, திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம், பூந்தமல்லி நகரசபை தலைவர் காஞ்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.