/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துாரில் இன்று தேர் திருவிழா
/
குன்றத்துாரில் இன்று தேர் திருவிழா
ADDED : மே 07, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்,குன்றத்துாரில் பழமைவாய்ந்த திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில், இக்கோவில் ராகு தலமாக கருதப்படுகிறது.
இங்கு, சித்திரை மாதம், பிரம்மோற்ச விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, இன்று காலை நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.