ADDED : டிச 08, 2024 12:22 AM
சென்னை,
சட்டசபையில் அறநிலையத்துறை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம், சென்னை, நுங்கம்பாக்கம் தலைமையகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கோவில்கள் திருப்பணி, சொத்துக்கள் மீட்கும் பணி குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய திருத்தேர்கள் உருவாக்கம், மராமத்து, தேர் கொட்டகைகள் அமைக்கும் பணிகள், திருக்குளங்கள் சீரமைப்பு, உலோகத் திருமேனி பாதுகாப்பு அறை கட்டுமானம், கோசாலை மேம்பாடு, மலைக்கோவில் கம்பிவட ஊர்தி மற்றும் மின்துாக்கி அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிக மானியங்களை அரசு வழங்கியுள்ளது. கோவில் திருப்பணிகள் அனைத்தையும் நிறைவேற்ற, களஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும். சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அறநிலைய துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார், இணை, துணை மற்றும் உதவிக் கமிஷனர்கள் பங்கேற்றனர்.